இந்தியச் செய்திகள்

ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. தனது மனைவியுடன், ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடி உள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13-ம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று எஸ்.பி.பி. – சாவித்ரி தம்பதியின் 51வது திருமண நாள் என்பதால், எஸ்.பி.பி.யை பார்க்க மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி சாவித்ரி, தங்களது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.சி.யூ.வில் வைத்து டாக்டர்கள் உதவியுடன் எஸ்.பி.பி. – சாவித்ரி தம்பதி கேக் வெட்டியதாக கூறப்படுகிறது.

Most Popular

To Top