சினிமா

தொலைக்காட்சி நடிகை ஷிவானியுடன் இணையும் பிக்பொஸ் முகேன்

இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் ‘பிக் பொஸ்’ பிரபலமான நடிகர் முகேன் கதையின் நாயகனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘வெப்பம்’ என்ற படத்தை இயக்கிய பெண் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் கதையின் நாயகனாக, பிக் பொஸ் சீசன் 3யில் போட்டியாளராக பங்குபற்றி வெற்றி பெற்ற பாடகரும் நடிகருமான முகேன் ராவ் அறிமுகமாகிறார்.

இவருக்கு ஜோடியாக ஜிவி பிரகாஷ் குமாருடன் ‘பேச்சுலர்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகை திவ்யபாரதியும், தொலைக்காட்சி தொடர் நடிகை ஷிவானி நாராயணனும் நடிக்கிறார்கள்.

இதில் நடிகை ஷிவானி நாராயணன் இந்தப் படத்தின் மூலம் வண்ணத்திரை நடிகையாக அறிமுகமாகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் நடிகராகவும், பாடகராகவும் அறியப்பட்ட முகேன் ராவ் பிக் பொஸ் சீசன் 3 இல் பங்குபற்றி வெற்றி பெற்றதன் மூலம் உலக அளவிலும், சமூக வலைத்தளத்திலும் பிரபலமானார். இவர் தமிழ் திரைப்படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாவதை, அவருடைய ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

Most Popular

To Top