இந்தியச் செய்திகள்

பிக்பாஸ் 4 – இலங்கையர்களும் உள்வாங்கப்படுகிறார்களா ….? – நிகழ்ச்சி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட கமல்

[vc_row][vc_column][vc_column_text]உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசன் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில்  கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக பிக்பாஸ் 4 குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியான வீடியோவில் அவர் கூறியதாவது:

இந்த கொரோனா வைரஸ் இந்த உலகமே ஒரு சின்ன கிராமம் என்பது நமக்கு உணர்த்தி விட்டது என்றும் அதற்காக நாம் வேலை இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க முடியாது என்றும் நம்மை நம்பி இருப்பவர்களை நாம் காப்பாற்ற வேண்டும் என்றும் அந்த வீடியோவில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார மையம் தெரிவித்த அறிவுரையின்படி நாம் பாதுகாப்பாக வேலை செய்வோம் என்றும் நான் என் வேலையை தொடங்கி விட்டேன் என்று கூறி பிக்பாஸ் 4வது சீசன் ஆரம்பித்ததை அவர் உறுதி செய்தார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது? இதில் யார் யாரெல்லாம் பங்கு கொள்ள போகிறார்கள்? என்ற தகவலை கமலஹாசன் கூறவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/j_yF6H_1IA0″][/vc_column][/vc_row]

Most Popular

To Top