துஷ்பிரயோகம் மற்றும் ஆட் கடத்தல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தலைமறைவாகியுள்ள சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு செல்ல விரும்புவதாக நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.
தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார்.
இதனையடுத்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சையான கருத்துக்களைப் பதிவிட்டு வரும் அவர் அண்மையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யாவின் குடும்பத்தினரைத் தகாத வார்த்தைகளால் சாடி பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் அவர் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல், அவரது உருவ பொம்மையையும் எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக கைலாச நாட்டின் நாணயத்தை வெளியிட்ட நித்யானந்தாவை பாராட்டி, மீரா மிதுன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவொன்றையிட்டுள்ளார்.
குறித்த பதிவில் அனைவரும் நித்யானந்தாவைக் கேலி செய்தார்கள், அனைவரும் அவரை தவறாக பேசினார்கள்.
அனைவரும் அவரை தரக்குறைவாக பார்த்தார்கள். அனைத்து ஊடகங்களும் அவருக்கு எதிராக இருந்தன. ஆனால் அவரோ கைலாசா எனும் புதிய நாட்டையே உருவாக்கியுள்ளார். விரைவில் கைலாசாவுக்கு செல்ல விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
Everyone mocked him,Everyone abused him,Everyone ran him down, Every media was against him,but today he creates a new country #Kailasa, going strong day by day. Would love to visit #kailasa soon. Lots of love #nithyanandaparamashivam ♥️https://t.co/n8URIXpAJR
— Meera Mitun (@meera_mitun) August 24, 2020
