சினிமா

S.P.B இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவு! – செயற்கை சுவாசம்… புதிய அறிக்கை வெளியீடு

எஸ்.பி.பி.யின் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளதாகவும் வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்காக பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி என்கிற எஸ்பி பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எஸ்.பி.பிக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நிலையில் அவர் உடல்நிலை குறித்து மருத்துவமனை தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி எஸ்.பி.பி.யின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எக்மோ சிகிச்சையால் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

Most Popular

To Top