இலங்கை செய்திகள்

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நலம்பெற இலங்கையில் கூட்டுப் பிரார்த்தனை

பாடும் நிலா என இசைப் பிரியர்களால் அழைக்கப்படும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் பூரண குணமடைய வேண்டி, கொழும்பு ஸ்ரீ பொன்னம்பல வாணேஸ்வரர் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த பிரார்த்தனையில் தமிழ் கலைஞர்கள் சந்திரசேகர், சுருதி பிரபா, எம்.சிவகுமார், டிலுக்சி, பிரேம் ஆனந்த், ஜெய பிரகாஷ் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டனர். பிரார்த்தனையை தொடர்ந்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

மேலும்  இலங்கை நெய்னார் சமூக நல காப்பக ஏற்பாட்டிலும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

இதேபோல் கொழும்பு சுதந்திர சதுக்கத்திலும் பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.

இலங்கை தமிழ் கலைஞர்கள் சங்கம் மற்றும் இலங்கை நெய்னார் சமூக நல காப்பக ஏற்பாட்டில் இது நடத்தப்பட்டது.

இலங்கை பாடகர் இர்பான் முஹம்மத் தலைமையில் இடம்பெற்றது. இதில் இலங்கை நெய்னார் சமூக நல காப்பக தலைவர் இம்ரான் நெய்னார், பிரபல கலைஞர் படத்தயாரிப்பாளர் ஸ்ருதி பிரபா, நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆனந்தராஜ், ஜெய்கணேஸ், மோகன் மற்றும் இர்ஷாத் மவுலானா ஹஸ்னி முஹம்மத் போன்ற பல முக்கிய பிரபலங்கள் கலந்து சிறப்பித்தனர்.

Most Popular

To Top