இந்தியச் செய்திகள்

S.P.B நுரையீரலில் ரத்தக்கசிவு! உடல் நிலை மேலும் கவலைக்கிடம்.

பாடகர் எஸ்பிபி-யின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றுக்காக பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி என்கிற எஸ்பி பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது எனவும், அவருக்கு தொடர்ந்து ECMO மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி எஸ்பிபி உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது.

மேலும் நுரையீரலில் ரத்தக்கசிவு நேரிட்டுள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்களும், திரையுலகினரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Most Popular

To Top