இந்தியச் செய்திகள்

எஸ் பி பாலசுப்ரமணியம் தொடர்பில் தற்போது வெளியான செய்தி…!

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் தற்பொழுது மயக்க நிலையிலிருந்து மீண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ் பி பாலசுப்ரமணியம் அண்மையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அனுமதிக்கப்பட்ட குறித்த சந்தர்ப்பத்திலிருந்து அவர் மயக்க நிலையில் காணப்பட்டதால் மருத்துவர்கள் கவலைக்கிடமாக உள்ளார் என அறிவித்தனர்.

எனினும் தற்பொழுது அவரின் உடல் நிலை தேறியுள்ளதாகவும், மயக்கத்திலிருந்து மீண்டுள்ளார் எனவும் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top