எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை குணமாகி மீண்டு வர வாழ்த்தி கவிஞர் வைரமுத்து உருக்கமான ஒன்றை வீடியோ வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரிய கவிஞர் வைரமுத்து. இவ நிழல்கள் என்ற படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.கடந்த வாரம் எஸ்.பி.பி. குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது. ஆனால் மருத்துவர் நிர்வாகம் அவர் ஐசியுவில் இருப்பதாகத் தெரிவித்தது.இந்நிலையில், பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை நேற்று இருந்தது போலவே சீராக உள்ளது என அவரது மகன் சரண் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் எஸ்.பி.பி. நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தங்களது விருப்பத்தை சமூகவலைதளங்களில் பதிவு செய்தார்கள்.
இந்நிலையில் எஸ்.பி.பி.க்காக ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்த எஸ்.பி.பி.யின் உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அபாயகட்டத்தை தாண்டிவிட்டார் என்பதைக் கேள்விப்பட்டதிலிருந்து எனக்கு மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சையில் உள்ள எஸ்.பி.பி. சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இதையடுத்து. எஸ்பிபி குறித்து கவிஞர் வைரமுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசியுள்ள வைரமுத்து, தனது முதல் பாடலை பாடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தமது கடைசி பாடலையும் பாட வேண்டுமென கூறியுள்ளார்.அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான ரோஜா படத்தில் வரும் காதல் ரோஜாவே பாடல் வரியை எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்காக பாடல் ராஜாவே என்று மாற்றி உருக்கத்துடன் வைரமுத்து பாடவும் செய்தார்.
மேலும்,’40 ஆண்டுகளாக மாறாதா மகா கலைஞர் எஸ்.பி.பி., உலகமே உனக்காக வேண்டி நிற்கிறது.இந்த உலகத்திற்கு இன்பம் மட்டுமே கொடுத்தவர் எஸ்.பி.பி. நீ மீண்டு வருவாய் இசை உலகை ஆண்டு வருவாய்.என் முதல் பாடலை பாடியவன் நீ. எனது கடைசி பாடலையும் நீ தான் பாட வேண்டும்,’ எனத் தெரிவித்துள்ளார்.
