காதல்

திருமண வாழ்க்கை சந்தோஷமா இருக்க இந்த விஷயங்களை செய்தாலே போதும்

உறவுகளை அழகாக பேணிக் காப்பது என்பது எளிதான விஷயம் கிடையாது. அதற்காக நீங்கள்  சில மணீத்தியாலங்களை செலவு செய்தல் வேண்டும். சதா ஆபிஸ், வீடு என்று காலம் போய்க் கொண்டு இருந்தால் ஒரு சமயத்தில் அந்த வாழ்க்கை போரடித்து விடும். அதே மாதிரி தான் உங்க துணையும் உணர்வார்கள். எனவே உங்க துணையை அப்பப்ப ஸ்பெஷலாக உணர வைப்பது அவசியம்.

சில நேரங்களில் உங்க உறவுகளை மேலும் அழகாக்க சுவையூட்ட மேலும் சில விஷயங்கள் தேவைப்படும். ஆனால் நாம் என்னவோ அப்படி செய்வதில்லை. திருமணம் ஆன புதிதில் உருகி உருகி காதலித்ததை போன்று ஆண்டுகள் ஆக ஆக இருப்பதில்லை. காரணம் நாம் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஓடிக் கொண்டே இருப்பது தான். சில சமயங்களில் நாம் பிஸியாக இருக்கும் போது உறவுகளை மறந்து விடுகிறோம்.

திருமண வாழ்க்கை
நிறைய சமயங்களில் வேலைக்கு போய்ட்டு வீட்டிற்கு வரும் போது சோர்வாகவும் சலிப்பாகவும் இருக்கும் சமயத்தில் நிறைய கணவன்மார்கள் துணையிடம் பேசுவது கூட கிடையாது. இப்படி தினமும் ஒரே மாதிரியாக வாழ்க்கை ஓடிக் கொண்டு இருந்தால் ஒரு கால கட்டத்தில் வாழ்க்கை சலிப்படைந்து விடும். எனவே எந்தவொரு உறவாக இருந்தாலும் அங்கே வேடிக்கைகளும் அன்பான செயல்களும் தேவைப்படுகிறது. உங்க உறவில் அதிகம் கவனம் செலுத்தி வேடிக்கையான உற்சாகமான விஷயங்களை செய்யும் போது உங்க இருவருக்கிடையேயான உறவு நெருக்கமாகுகிறது. குடும்பத்தில் சந்தோஷம் பெருகுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக போகப் போக கசக்கக் கூடிய காதலும் இனிக்கின்றன.

எனவே உங்க உறவை எப்படியெல்லாம் அழகாக வேடிக்கையாக அன்பாக மாற்றலாம் என்பதை அறிந்து கொள்வோம். இதை நீங்களும் உங்க துணையிடம் செய்து உங்க உறவின் நெருக்கத்தை அதிகப்படுத்துங்கள்.

உரையாடுங்கள்
அனைத்து உறவு சிக்கல்களையும் தீர்க்க மனசு விட்டு பேசுவது என்பது முக்கியம். இது உங்க துணையை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். உங்க துணையுடன் பிணைப்பின் தரத்தை மேம்படுத்த உதவி செய்யும். மேலும் ஒருவருக்கொருவர் தரமான நேரத்தை செலவிட இது உங்களுக்கு உதவி செய்யும். எனவே கணவனும் மனைவியும், காதலனும் காதலியும் மனசு விட்டு பேச முயற்சி செய்யுங்கள்.

உங்க துணை பேசும் போது கவனியுங்கள்
உங்க கேட்கும் சக்தியை மேம்படுத்த முயலுங்கள். தகவல் தொடர்பு என்பது இரண்டு பக்கமும் இருக்கும் பட்சத்தில் உறவின் புரிதல் அதிகமாகிறது. எனவே உங்க துணை பேசும் போது கவனமாக கேளுங்கள். உங்க துணையின் சிக்கல்களைக் குறித்து கேட்பது ஆழ்ந்த மட்டத்தில் இருந்து உங்களை இணைக்க உதவி செய்யும். இது உங்க இருவருக்கிடையேயான பாதையை தெளிவுபடுத்தும்.

ஆச்சர்யங்கள் அதிசயங்களை செய்யலாம்
சில நேரங்களில் உங்க துணைக்கு ஆச்சரியத்தை கொடுத்து அவர்களை குஷிப்படுத்தலாம். சர்ப்ரைஸ் கிஃப்ட், சர்ப்ரைஸ் விசிட் போன்றவைகள் உங்க காதல் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கும். ஒரே மாதிரியாக உங்க குடும்ப வாழ்க்கையும் சரி காதல் வாழ்க்கையும் சரி கொண்டு சென்றால் சலிப்படைய ஆரம்பித்து விடும். இந்த மாதிரியான சர்ப்ரைஸ் பொருட்கள் உங்க துணையை மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் உங்களுடனான நெருக்கத்தை அதிகரிக்கவும் உதவி செய்யும்.

​ஒருவருக்கொருவர் அதிக நேரம் கொடுங்கள்
திருமணம் ஆன ஆரம்பத்தில் அல்லது காதல் ஆரம்பித்த ஆரம்பத்தில் எல்லாமே நல்லதாகவும் வேடிக்கையாகவும் தெரியும். ஆனால் காலப்போக்கில் அவரவர் வேலைகளில் பிஸியாக இருப்பது ஒருவருக்கொருவர் நேரத்தை செலவழிக்க முடியாமல் போகிறது. இதனால் தான் சரியான புரிதலின்றி பல உறவுகள் பிரிவின் எல்லைக்கு வருகிறது. எனவே உங்க துணைக்கு தேவையான கவனத்தையும் நேரத்தையும் வழங்குவது அவசியம்.

உங்க விடுமுறையை பயனுள்ள வகையில் களியுங்கள்
இந்த அவசர கால கட்டத்தில் நமக்கான ஓய்வு நேரம் கிடைப்பதே அபூர்வம். எனவே உங்களுக்கு கிடைக்கும் விடுமுறை நாட்களை உங்க குடும்பத்துடன் செலவழிக்கலாம். உங்க துணைக்கு மற்றும் உங்களுக்கு பிடித்த அற்புதமான இடங்களுக்கு நீங்கள் சென்று வரலாம். ஒன்றாக ஒரு சாகச பயணம், இயற்கை எழிலுடன் கூடிய இடங்கள், பொழுது போக்கு அம்சங்கள் போன்றவை உங்களுக்கும் உங்க துணைக்கும் இடையேயான பிணைப்பை அதிகப்படுத்தும்.

​டேட்டிங் ஸ்பெஷல்
எப்பொழுதுமே நினைவுகள் என்பது அழகானது. எனவே நீங்கள் உங்க துணையை சந்தித்த முதல் நாள், உங்க திருமண நாள் மற்றும் ஸ்பெஷலான நாட்களை நினைவு கூர்ந்து கொண்டாடுங்கள். இது உங்க நினைவுகளையும் உறவுகளையும் அழகாக்கும்.

​துணையின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்
நாம் எல்லாரும் ரொம்ப சுயநலமாக இருக்கிறோம். ஆனால் உறவில் இருக்கும் போது சுயநலமாக இருப்பது வேலைக்கு ஆகாது. உங்க துணையின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க பழக வேண்டும். ஆனால் நாம் எல்லோரும் நம் சொந்த முன்னுரிமைக்கே முதலிடம் கொடுக்கிறோம். உங்க துணைக்கு இயற்கையான சூழல் பிடிக்கும் என்றால் நீல நிலவில் அவருடன் நேரத்தை கழியுங்கள். இது உங்க உறவுக்கு தேவையான ஊக்கத்தை உங்களுக்கு வழங்கும். மேலும் இது உங்க உறவை மேம்படுத்தும்.

Most Popular

To Top