காதல்

ஆண்களே உஷார்….!

ஆண்கள் மட்டும்தான் மோசமாக நடப்பார்கள், இருப்பார்கள் என்பதில்லை. பெண்களிலும் அப்படிப்பட்டவர்கள் உண்டு. அதனால் எப்படிப்பட்ட பெண்களைக் கண்டதும் விலகுவது நல்லது என்பதை இனி பார்க்கலாம்.

பணத்துக்காக எதையும் செய்பவள் எனத் தெரியவந்தால்,

உடல்ரீதியான தொடர்பு பல ஆண்களிடம் காதலுக்குப் பின்னரும் இருக்கிறது என அறிந்தால்,

பரிசுப் பொருளை பெறுவதற்காக சந்தித்து,பொருள் வாங்கியதும் விலகி ஓடுபவராக இருந்தால்,

நான் மட்டும் இல்லன்னா, உங்களால் ஒண்ணும் செய்ய முடியாது என ஆணை மட்டும் தட்டுபவளாக இருந்தால்,

ஆண் தனது குடும்பத்தைப் பற்றி முழுமையாகச் சொன்ன பின்னரும், பெண் அவளது குடும்பத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல் மவுனம் காத்துவந்தால்

சில ஆண்களுடன் செக்ஸ் ரீதியாக தொடர்புவைத்திருப்பவர் என அறிய நேர்ந்தால்

எதற்கெடுத்தாலும் ஆணைக் குறை சொல்பவளாக, வேலைக்கு ஏவுபவளாக இருந்தால்

திருமணம் பற்றிய பேச்சை எடுத்ததும், தட்டிக் கழிப்பவளாக இருந்தால்

என் அழகைப் பார்த்து இன்று இரண்டு நபர்கள் மயங்கினார்கள், காதல் சொன்னார்கள் என்று அவளது அழகை அடிக்கடி பீற்றிக்கொள்பவளாக இருந்தால்

ஆண் நண்பர்களுடன் சினிமா, பீச் போன்ற இடங்களில் சகஜமாக உலவுகிறாள் என தெரிய வந்தால்

கல்யாணத்துக்குப் பிறகு ஏதாவது பிரச்சனை பண்ணினா லேசுல விடமாட்டேன். போலீஸ்ல சொல்லி உள்ளே தள்ளிடுவேன் என மிரட்டுபவளாக இருந்தால்

செக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவளாக இருந்தால்

திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்ற தீவிர கொள்கையுடன் இருந்தால்

அடிக்கடி விலை உயர்ந்த பரிசுப் பொருள் கேட்டு நச்சரிபவளாக இருந்தால்

பழைய ஆண் நண்பர்களுடன் தொடர்பு இருந்தால், புதிய ஆண்களிடம் காதலைத் தூண்டுவதுபோல் பேசுவதாக இருந்தால்

இப்படிப்பட்ட பெண்களிடம் இருந்து ஆண் எத்தனை சீக்கிரம் விலகுகிறானோ அத்தனை நல்லது.

ஆன்-பெண் இருவரும் நன்றாக பழகியபின் விலகுதல் என்பது கேட்க சாதாரணமாக இருக்குமே தவிர, மிகக் கஷ்டமான விஷயமாகும்.

கத்தி மேல் நடப்பதுபோல் நிலைமையை மிகத் தெளிவாகக் கையாண்டால் மட்டுமே, விலகுதல் மிக எளிதாக இருக்கும். ஆரம்ப காலத்தில் காதலில் இருந்து வெளியேறும்போது, இருவரிடமும் எல்லாவிதமான ஆதாரமும் இருக்காது.

காதல் கடிதங்கள், புகைப்படங்கள், பரிசுப் பொருள்கள் என இப்போது இருவரிடமும் தேவையான அளவு ஆதாரங்கள் இருக்கும்.

அதனால் எதிர்த்தரப்பினர் ஏமாற்றித் தப்பிக்க நினைப்பதாக முடிவு செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடியும் என்பதால் ஆற அமர யோசித்துதான் முடிவுக்கு வர வேண்டும்.

Most Popular

To Top