காதல்

அந்த உறவும் இந்த உறவும் ஒன்றல்ல….!

நீங்கள் உங்கள் மனங்கவர்ந்தவரை தேடும்போது , இதையும் நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் காமத்தையும் காதலையும் போடு குழப்பிக்கொள்ள நேரிடலாம் . ஏனெனில் , தாம்பத்ய உறவு உற்சாகமாக இருப்பதால் , உறவும் உற்சாகமாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள் .

திருமணமான பின்பு ஓரிரு வாரங்களுக்கு பின் மணமக்களை பார்த்திருக்கிறீர்களா..? ஒரு சிலருடைய திருமணம்தான் சரியாக இருக்கும் . ஆனால் , பெரும்பாலானோர் உடல் கவர்ச்சியினால் ஏமாற்றப்பட்டிருப்பார்கள் .

நீண்டநாள் உறவை பேண போதிய நியாயம் இருக்கிறதா என்று அவர்கள் பார்த்திருக்கமாட்டார்கள். உண்மையில் அப்படி ஒரு சாத்தியம் இருக்கவே இருக்காது .

நீங்கள் சும்மா ஜாலிக்காக சுற்றுபவர் என்றால் , பாலியல் கவர்ச்சியோ அற்புதமான பாலியல் தொடர்புகள் கொண்ட வாழ்க்கையோ பெரிய விஷயங்களாக உங்களுக்கு தோன்றலாம் .

நல்ல உறவைவிட இதில் ஏதோ ஒன்று கூடுதலாக இருக்கிறது என்று கூட நீங்கள் சொல்லலாம் . நீங்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் . அது எவ்வளவு கூடுதலாக இருக்கிறது . அந்த கூடுதல் உங்களுடைய மகிழ்ச்சியான மற்றும் மோசமான காலகட்டங்களை கடந்து செல்ல உதவுமா?

நம் வாழ்வில் பல்வேறு கட்டங்களில் வரும் நோயும் வேதனைகளும் இன்னபிற சோகங்களையும் அதனால் சந்திக்க முடியுமா ?

உங்களுக்கு இதற்கெல்லாம் சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் , உடல்ரீதியான் கவர்ச்சியிலேயே தொடர்ந்து முழுகி இருங்கள் . ஆனால் காமம் தீரும்வரை , அது தீர்ந்தபின் கிடைக்கும் தெளிவு வரை , எந்த வகையான உண்மையான உறவிலும் ஈடுபட வேண்டாம் .

Most Popular

To Top