காதல்

உங்களை மதிக்காதவரோடு சேர்ந்து வாழ முடியுமா…..?

உங்கள் காதலர்(காதலன் / காதலி) உங்களை அபூர்வமானவராக நினைக்கவைக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் அபூர்வமானவர் என்பதை அவர் உங்களுக்கு உணர்த்தவும் வேண்டும்.

இல்லையெனில் , நீங்கள் பிரிந்துபோகாமல் தடுக்க எல்லா முயற்சிகளையும் அவர் எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். கடைசியில் அப்படித்தான் நடக்கும்.

உங்கள் மேல் உங்கள் காதலர் உண்மையான் அக்கறை கொண்டிருந்தார் என்றால், அவர் அதை தெளிவுபடுத்திவிடுவார். ஆனால் , அடிமனத்தில் அவர் தன்னை முதன்மை படுத்திகொண்டு, உங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறவராக இருந்தால், அது நிச்சயம் மாற போவதில்லை.

நீங்கள் இதைவிட சிறப்பாக கவனித்து கொள்ள படவேண்டியவர். உங்களுக்கு மகிழ்ச்சியளிக்க கூடிய மற்றோரு நபரை தேடி செல்ல ஆரம்பியுங்கள்.

உங்கள் உறவு தொடங்கும்போதே , உங்கள் காதலர் உங்கள் மேல் அக்கறை செலுத்தவில்லை என்றால், போக போக நிலைமை இன்னும் மோசமாகவே செய்யும்.

அவரோடு சேர்ந்து இருந்தாலோ , திருமணம் செய்துகொண்டாலோ அல்லது வேறேதாவது செய்தால் நிலைமை சீராகவும் என்று நீங்கள் நினைத்தால் அது நிச்சயம் தவறு. நிலைமை இன்னும் மோசமாகவே செய்யும் .

திருமணம் போன்ற பெரிய முடிவுகளை எடுக்கும் முன்பு இதையெல்லாம் நன்கு யோசித்துக்கொள்ளுங்கள். சரி இறுதி வாய்ப்பு ஒன்று கொடுத்து பார்ப்போம் என்று நினைத்தீர்கள் என்றால், நிறைய கால அவகாசம் கொடுங்கள் . அவர் உண்மையிலேயே மாறி விட்டாரா என்பதை பார்த்துக்கொண்டு அப்புறம் இறுதி முடிவு எடுங்கள் .

இல்லையேல் இவரோடேயே வாழ்ந்து அவரை திருத்த முயற்சிக்கலாம் என்றால் அது உங்களை நம்பிக்கை இழக்க செய்யும் . உங்கள் சுயமதிப்பை குறைத்துவிடும் . அத்துடன் மகிழ்ச்சியே இல்லாமல் செய்துவிடும்

உங்களை அனைத்து வகையிலும் சரியாக பார்த்துக்கொள்ள கூடிய ஒருவர் எங்கோ இருப்பார். . . . அதனால் பொறுமையாக இருந்து , உங்களை புரிந்துகொள்ள கூடிய ஒருவர் (ஒருவனோ / ஒருத்தியோ) வரும்வரை காத்திருங்கள் .

Most Popular

To Top