காதல்

புத்திசாலிகள் காதலிக்கலாமா – வித்தியாசமான ஆராய்ச்சி

காதலுக்கு கண்ணில்லை என்று ஒரு முதுமொழி உண்டு. இன்று அவ்வாறு சொல்ல முடியாது. காதல் வயப்பட்டவர்கள் அடிமுட்டாளாகி விடுகின்றனர்,

அதிபுத்திசாலிகளாகக் கருதப்படுபவர் காதலுக்குட்பட்டாரானால் அவர் புத்தியை இழந்து விடுகிறார்.

ஜேர்மனியிலுள்ள ஒக்ஸ்பேகைச் சேர்ந்த உளவியல் நிபுணர் டொக்டர் சக்பிரைட் கந்தர் நடாத்திய ஆய்வின் முடிவில் இக்கூற்றை வெளியிட்டுள்ளார்.

சிறந்த அறிவாளிகளாக விளங்கிய பலர் காதல் வலையில் விழுந்ததும் அவர்கள் அறிவற்றவர்களையும் விட மோசமான முட்டாள்களாக மாறிவிட்டுள்ளதனை அவதானித்திருக்கின்றேன் என கந்தர் கூறியுள்ளார்.

ஒருவர் காதல் வலையில் விழுந்ததும் அவருடைய மூளையின் நரம்புகளில் ஒருவிதத் தாக்கம் ஏற்பட்டுவிடுகிறது.
இதனால் இவர்களுடைய புத்திக்கூர்மை மழுங்கிவிடுகிறது.

இது ஒரு மோட்டார் இயந்திரத்தில் உள்ள பிளக் எனப்படும் தீப்பொறிக்கும் சாதனத்தைப் போன்றது. இந்தப் பிளக்குகள் சில சமயங்களில் தீப்பொறிகளைக் கக்காவிட்டால் இயந்திரம் இயங்குவது கடினம். இதேபோலத்தான் மூளையிலுள்ள சில மென்மையான நரம்புகள் காதல் விவகாரங்களில் புலனைச் செலுத்தும் நபரை தளர்வடைய வைத்துவிடுகின்றன. இந்நிலையில் எவ்வளவு புத்திசாலியானாலும் அவர் புத்திகுறைந்து காணப்படுவார்.

100க்கு மேற்பட்ட அறிவாளிகளையும் அறிவில் குறைந்தவர்களையும் தனது ஆய்வுகளில் பயன்படுத்தி டொக்டர் கந்தர் முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

அறிவு குறைந்தவர்கள் பொதுவாக காதல் வயப்படும் போது பெரும்பாதிப்புக்குள்ளாவதில்லை. அறிவாளிகளே காதலால் தடுமாறி புத்தியில்லாதவர்களைப் போல் ஆகிவிடுகின்றனர் என்கிறார் டொக்டர் கந்தர்.

பரீட்சைக்குட்படுத்தப்பட்டவர்களை ஆய்வாளர்கள் பலதரப்பட்ட சம்பவங்களையிட்டு சிந்திக்கும்படி கேட்டுள்ளனர்.

இவர்களுடைய மூளை எவ்வாறு செயற்படுகின்றது, எத்தகைய தாக்கத்திற்குள்ளாகிறது என்பதனைக் கணக்கிட நவீன கருவிகளை அவர்களின் தலைகளில் பொருத்தியுள்ளனர். பல்வேறு வகை சிந்தனைகளிலும் அவர்கள் எண்ணங்களை ஆய்வாளர்கள் ஈடுபடுத்தினர்.

சர்வசாதாரணமாக அவற்றைக் கணக்கிடும் கருவி, இவர்கள் காதல் பற்றிய சிந்தனையில் அமிழும்போது முற்றிலும் வித்தியாசமான நிலைகளை எடுத்துக்காட்டுகின்றனவாம்.

உயர்ந்த அறிவாற்றல் உள்ளவர்களை காதல் சிந்தனையில் ஈடுபடும்படி செய்யும்போது அவர்களிடம் அறிவில் குறைந்தநிலை ஏற்படுவதை அவதானித்தோம்.

அதேவேளை அறிவில் குறைந்த – கல்வி அறிவற்றவர்களுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் வீழ்ச்சியடையாமலிருந்தன என்பதனை அவதானித்ததாக டொக்டர் கந்தர் தெரிவித்திருந்தார்.

Most Popular

To Top