ஜீவன் தொண்டமானுக்கு வழங்கப்பட்ட மற்றுமொரு பதவி!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான்பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் நடப்பு வருட நிர்வாக சபைக்கு புதிய நிர்வாக தெரிவுகளில் தலைவராக ஜீவன் தொண்டமானும், பொதுச் செயலாளராக பொன்னையா சிவராஜாவும் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தலைமையகமான சௌமிய பவனில் நேற்று நடைபெற்ற பெருந்தோட்டசேவையாளர் காங்கிரஸ் நிர்வாக குழு கூட்டத்தின் போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பதவி ஏற்றுக்கொண்ட ஜீவன் தொண்டமான் கருத்துத் தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட சேவையாளர்கள் இன்று தோட்டங்களின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் பாடுபடுகின்றனர். இவர்களது வாழ்வு செழிப்பாக உயர வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயதேவையாகும்.

எதிர்காலத்தில் தோட்டச் சேவையாளர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

To Top