கருணாவால் தமிழ் பிரதிநிதியை இழந்தது அம்பாறை!

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி இம்முறை திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு தமிழ்ப் பிரதிநிதியும் தெரிவு செய்யப்படவில்லை.

அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டமைக்கு கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனே காரணம் என்று கருதப்படுகின்றது.

திஹாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ்க் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் ஒருவரே வெற்றி பெற முடியும் என்ற நிலையே காணப்படுகின்றது.

இந்நிலையில் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் போட்டியாக பல முனைகளில் கட்சிகள் களமிங்கின. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே கடந்த தேர்தல்களில் அங்கு வெற்றி பெற்று வந்தது.

நேற்றைய தேர்தல் முடிவுகளின்படி அம்பாறையில் கடும் போட்டியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட கருணா கணிசமான வாக்குகளை (சுமார் 22 ஆயிரம் வாக்குகளை) பெற்றதன் மூலம் தமிழ் மக்களின்
வாக்குகள் சிதறடிக்கப்பட்டது.

இதனால் தமிழ் மக்களின் சார்பில் எந்த ஒரு பிரதிநிதியும் தெரிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

To Top